2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

ஆற்று மணல் அகழ்வதற்கு விசேட அனுமதி

பேரின்பராஜா சபேஷ்   / 2019 ஒக்டோபர் 14 , பி.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மட்டக்களப்பு – செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மயிலவெட்டுவான், வீரக்கட்டு பகுதியில் ஆற்று மணல் அகழ்வதற்கு வெளி மாவட்டத்தைச் சேர்ந்த பெரும்பாண்மை இனத்தவர்கள் 10 பேர் உட்பட 25 பேருக்கு, 97,500 கியூப் ஆற்று மணல் அகழ்வதற்கு நீர்பாசனத் திணைக்களம் விசேட அனுமதி வழங்கவதற்கு சிபாரிசு செய்துள்ளது.

நீர்ப்பாசனத் திணைக்கள மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் எந்திரி எஸ்.எம்.வீ.எம்.அஸார், இவர்களது பெயர் விவரங்களை புவிசரிதவியல் அளவை, சுரங்கங்கள் பணியக, மட்டக்களப்பு மாவட்ட பொறியிலாளருக்கு அனுப்பிவைத்துள்ளார்.

விவசாய, நீர்ப்பாசன, கிராமிய பொருளாதார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலியின் சிபாரிசின் அடிப்படையில் 08 பேருக்கு தலா 5,000 கியூப் வீதமும், தமிழ் ஐக்கிய சுதந்திர முன்னணி தலைவர் வி.முரளிதரனின் சிபாரிசின் அடிப்படையில் 07 பேருக்கு 20,000 கியூப், ஜனாதிபதி செயலக விசேட திட்டப் பணிப்பாளர் சிபாரிசின் அடிப்படையில் 10 பேருக்கு 37,500 கியூப் ஆற்று மணல் அகழ்வதற்கு அனுமதி வழங்கும் வகையில், குறித்த சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் மணல் அகழ்வதற்கான விசேட அனுமதி, ஆறு மாதங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X