2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இந்த வருடத்துக்குள் ஒரு இலட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகள்

Editorial   / 2019 மார்ச் 18 , பி.ப. 02:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன், ஏ.எச்.ஏ. ஹுஸைன்

ஒரு இலட்சம் பேருக்கான வேலை வாய்ப்புகளை, இந்த வருடத்துக்குள் உருவாக்குவதற்கான வேலைத்திட்டத்தை, தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபையால் மேற்கொண்டு வருவதாக, இச்சபையின் தலைவர் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள முன்பள்ளி ஆசிரியைகளுக்கான தேசிய தொழிற் தகமை சான்றிதழை வழங்குவது தொடர்பான முன்னாயத்த மதிப்பீடு செய்யும் நடவடிக்கையை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்துரையாற்றிய அவர், ஒரு இலட்சம் பேருக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கான அறிக்கையை, பிரதமரிடம் சமர்ப்பித்துள்ளதாகவும் அந்த வேலை வாய்ப்புகளில் அதிகமானவை கிழக்கு மாகாணத்திலேயே கொடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

அத்துடன், அந்த அறிக்கையை, பிரதமர், அமைச்சரவைக்குச் சமர்ப்பித்தால், வேலையில்லாப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் இரண்டு இலட்சத்துக்கு மேற்பட்ட இளைஞர், யுவதிகள் வேலையில்லாமல் இருக்கின்றனர் எனத் தெரிவித்த அவர், கிழக்கு மாகாணத்தில் அதிகமானோர், அரச தொழிலை நம்பியிருக்கின்றவர்ளாக உருவாக்கப்பட்டுள்ளார்கள் என்ற யதார்தத்தை மாற்றி, அவர்களுக்கு எத்தனையோ முறையில் தொழில்களை இந்த நாட்டில் பெற முடியும் என்ற விடயத்தைத் தாம் சொல்லி வருவதாகவும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .