2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

இனந்தெரியாத காய்ச்சல்; முல்லையில் கொழும்பு குழு ஆய்வு

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2017 டிசெம்பர் 17 , பி.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 20 நாட்களுக்குள், இனந்தெரியாத காய்ச்சல் காரணமாக, 9பேர் உயிரிழந்தமை தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்ள கொழும்பில் இருந்து வைத்தியக் குழு ஒன்று முல்லைத்தீவு மாவட்டத்துக்கு சென்றுள்ளது.

 

இதற்கமைய, அக்குழுவினரால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், தடுப்பு நடவடிக்கையும் முன்னெடுத்து வருகின்றது.

முல்லைத்தீவு நகரப் பகுதியைச் சேர்ந்தவர்களே இந்தக் காய்ச்சல் காரணமாக உயிரிழந்தனர். தொடர்ச்சியான காய்ச்சலின் பின்னர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட 9 பேரும் உயிரிழந்தனர். இது தொடர்பில் வட மாகாண சுகாதாரத் திணைக்களத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டதையடுத்து, கொழும்பு தொற்று நோய் தடுப்புப் பிரிவு மற்றும் ஆய்வகத்தின் கவனத்துக்கு சுகாதாரத் திணைக்களம் கொண்டு சென்றது. இதையடுத்தே முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அத்துடன் தடுப்பு நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதேவகை காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இருவர், முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில், மாகாண சுகாதாரப் பணிப்பாளர் வைத்தியக் கலாநிதி ஆ.கேதீஸ்வரனை தொடர்பு கொண்டு கேட்டபோது,

“இது தொடர்பில் எமது கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. எமது வைத்தியக் குழு முதலில் ஆய்வுகளை மேற்கொண்டது. அதேநேரம் கொழும்பு சுகாதார அமைச்சுக்கும் தகவல் வழங்கப்பட்டது.

அதனடிப்படையில், கடந்த இரு தினங்களாக முல்லைத்தீவில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. காய்ச்சலுக்கு காரணமான வைரஸை அடையாளம் காணும் முயற்சி வேகமாக இடம்பெற்று வருகின்றது” எனத் தெரிவித்தார்.      


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X