2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

இனப்பிரச்சினைக்கான தீர்வு தமிழ் - முஸ்லிம் மக்களின் ஒற்றுமையில் உள்ளது

Editorial   / 2018 ஓகஸ்ட் 05 , பி.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

.ஏ.எச்.ஏ. ஹுஸைன் ரீ.கே.றஹ்மத்துல்லா, எம்.எஸ்.எம்.நூர்தீன

முஸ்லிம்களின் உணர்வுகளையும், உரிமைகளையும் ஒழித்து விட்டு அம்மக்களின் அடிப்படைப்பிரச்சினைகளுக்குத் தீர்வு காணாமல் வடக்கு கிழக்கு இனப்பிரச்சினைக்கு ஒரு போதும் தீர்வுக் காண முடியாது என்பதை, தமிழ்த் தலைமைகள் புரிந்து கொள்ள வேண்டுமென நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

கடந்த 3ஆம் திகதி  காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர்  மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கூறியதாவது,

தமிழ் - முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக வாழ்வதன் ஊடாக வட கிழக்கு இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம். மாறாக முஸ்லிம்களின் உணர்வுகளையும், உரிமைகளையும் ஒழித்து விட்டு அம்மக்களின் அடிப்படைப்பிரச்சினைகளுக்குத் தீர்வு காணாமல் வடக்கு கிழக்கு பிரச்சினைக்கு ஒருபோதும் தீர்வு காண முடியாது. இந்த விடயத்தில் தமிழ் தலைமைகள் மிகத்தெளிவாக இருக்க வேண்டும்.

வடகிழக்கு பிரச்சினைக்கு தீர்வு காணப்படுவதாக இருந்தால் முஸ்லிம்களை தமிழ் மக்கள் கௌரவிக்க வேண்டும். முஸ்லிம்களின் உரிமைகளையும் பெற்றுக்கொடுப்பதற்கும், தேவைகளையும் நிவர்த்தி செய்வதற்கும் தமிழ் தலைமைகள் முன்வர வேண்டும்.

மாறாக தமிழ் தலைமைகள் தமது அரசியல் சுயலாபங்களுக்காக தமிழ் பிரதேசங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம், கோஷங்கள், விமர்சனங்களை முன்வைக்கின்ற போது ஒரு போதும் வடகிழக்குப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது.

தமிழ் - முஸ்லிம் மக்கள் இந்த மண்ணிலே நிம்மதியோடு – அரசியல் தீர்வு பெற்று வாழ வேண்டுமாக இருந்தால் முஸ்லிம்களின் அடிப்படைத் தேவைகள், அரசியல் உரிமைகளை மதிக்கின்ற சமூகமாக தமிழ் சமூகம் மாற வேண்டும். – என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X