2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் தமிழ் மக்களின் ஆணை வேண்டும்’

பேரின்பராஜா சபேஷ்   / 2018 ஜனவரி 04 , பி.ப. 02:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நடைபெறவுள்ள உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகள், இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுத்துவரும் நகர்வுகளுக்கு, தமிழ் மக்கள் வழங்கும் ஆணையாக அமைய வேண்டும்”  என, முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெவித்தார்.

உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு தொடர்பாக, இன்று (04) ஊடகங்களுக்கு  கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார். 

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்

“நடைபெறவுள்ள உள்ளூராட்சிமன்றத் தேர்தல், தமிழ் மக்களைப் பொறுத்தமட்டில், வெறுமனே அபிவிருத்தியை மாத்திரம் மையமாகக் கொண்ட தேர்தலாக இருக்காமல், எமது அரசியல் அதிகாரத்தைத் தீர்மானிக்கும் தேர்தலாக நாங்கள் பார்க்க வேண்டும்.

“கிராமங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ளும் தேர்தலாக மாத்திரம் அல்லாமல், அரசியல் ரீதியாக தமிழ் மக்களை ஒரு நிலைக்குக் கொண்டு செல்லக்கூடிய ஒரு தேர்தலாக இருக்கின்றது.

“எமக்கு நிரந்தர நிலையான அரசியல் தீர்வு வருவதற்கு, இந்தத் தேர்தலில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் போட்டியிடும் சகல இடங்களிலும் தமிழ் மக்கள் வெற்றியை வழங்க வேண்டும்.

“தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுத ரீதியாகப் பலமாக இருந்த காலத்தில், அரசியல் ரீதியான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் அனுசரணையுடன் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்பும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்காகப் பல வழிகளிலும் போராடிக்கொண்டிருக்கிறது.

“தமிழ் மக்களுக்கான நிரந்தரத் தீர்வுத் திட்டமொன்றைக் கொண்டுவருவதற்கு  உள்நாட்டிலும் சர்வதேசத்திலும்  கூட்டமைப்பு மாத்திரமே போராடிக்கொண்டிருக்கிறது.

“பிரிந்து சென்றவர்கள், தேர்தலின் பின்னர் தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து செயற்பட வேண்டும் என்ற எண்ணப்பாட்டுடன் கூட்டமைப்புடன் ஒன்று சேர்ந்து, தலைமையப் பலப்படுத்துவதற்கு, இந்தத் தேர்தலில் தமிழ் மக்கள் அவர்களுக்கு நல்ல பாடத்தைப் புகட்ட வேண்டும்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .