2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘இனவாதத்தை கொக்கரிக்கின்றனர்’

Editorial   / 2019 ஒக்டோபர் 22 , பி.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.விஜயரெத்தினம்

புலிகள் கேட்டதைத்தான் ஐந்து தமிழ்க் கட்சிகளும் கேட்கிறார்கள் என்று, கோட்டாபயவை ஆதரிக்கும் விமல்வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார தொடக்கம் காத்தான்குடி வேட்பாளர் ஹிஸ்புல்லாஹ் வரைப் பலர் இனவாதத்தைக்  கொக்கரிக்கின்றனர் என, மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கை தமிழரசுக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதித் தலைவருமான பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

விடுதலைப் புலிகள், தந்தை செல்வா முன்வைத்த கோரிக்கையின் அடிப்படையிலேயே, ஆயுதம் ஏந்தி போராடினார்களே தவிர, அவர்கள் தானாக எந்தக் கோரிக்கையும் முன்வைத்துப் போராடவில்லையெனவும் அவர் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், மாறிமாறி ஆட்சிபீடம் ஏறும் பெரும்பான்மையினத் தலைவர்கள், தமிழர்களைப் பகடைக்காய்களாக வைத்து இனவாதம் பேசிய வரலாறே இன்றுவரையும் தொடர்வதாகவும்  விடுதலைப் புலிகள் முள்ளிவாய்காலில் மௌனித்தாலும் அவர்களின் பெயரை உச்சரிக்காமல், அவர்களின் செயலை மீட்டுப்பார்க்காமல், எந்தப் பெரும்பான்மையினத் தலைவர்களும் தமது தேர்தல் பிரசாரங்களை முன்னெடுக்கமுடியவில்லையெனவும் தெரிவித்தார்.

அதேவேளை, தமிழ் அரசியல் கட்சிகள் ஐந்தும் இணைந்து முன்வைத்த கோரிக்கை, தமிழீழம் இல்லை எனக் கூறிய அவர், “இந்த நாட்டில், தமிழர்கள் சுதந்திரமாக, சகல உரிமைகளையும் பெற்று வாழ்வதற்காக சுய நிர்ணய உரிமையுள்ள கோரிக்கை மட்டுமே” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .