2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இரண்டாம் நிலைக் கல்வி வழங்கல் குறித்து ஆய்வு

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2018 ஜூலை 16 , பி.ப. 08:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்வி வலயங்களில் இரண்டாம் நிலைக் கல்வி வழங்கல், உள்ளூராட்சி சபைகளினது சேவை வழங்கல் தொடர்பாக "குடிமக்கள் அறிக்கை அட்டை" ஆய்வு மேற்கொள்ளப்பட்டதெனவும், ஆய்வின் பெறுபேறுகள் வெளியிடப்படவுள்ளன எனவும், வறுமை ஆராய்ச்சி நிலையத்தின் ஆய்வாளர் அனுஷா சிவலிங்கம் தெரிவித்தார்.

இது தொடர்பாக நேற்று (16) மேலும் தெரிவித்த அவர், மட்டக்களப்பு மத்தி, மட்டக்களப்பு மேற்கு, பட்டிருப்பு, கல்குடா ஆகிய கல்வி வலயங்களில் உள்ளடங்கும் 20 கிராம சேவகர் பிரிவுகளிலுள்ள சுமார் 400 குடும்பங்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டிருந்தன எனவும், எழுமாறாகத் தெரிவுசெய்யப்பட்ட இக்குடும்பங்களிடம் "குடிமக்கள் அறிக்கை அட்டை" ஆய்வு எனும் விடயதானத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது எனவும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், “ஐரோப்பிய ஒன்றியம், அக்டெட் (Acted) ஆகிய நிறுவனங்களின் அனுசரணையுடன், வறுமை ஆராய்ச்சி நிலையத்தால் மேற்கொள்ளப்பட்ட இவ்வாய்வின் முதற்கட்டக் கண்டறிவுகளை, சில தினங்களில் ஓர் அறிக்கையாக வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

“மாவட்ட செயலாளர், உள்ளூராட்சி உதவி ஆணையாளர், வலய கல்விப் பணிப்பாளர்கள், பிரதேச சபைத் தவிசாளர்கள், பிரதேச சபைச் செயலாளர்கள் ஆகியோரின் கவனித்துக்காக ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X