2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இலங்கை முதலீட்டாளர் சபைக்கு 200 ஏக்கர் காணி கையளிப்பு

Princiya Dixci   / 2021 பெப்ரவரி 10 , பி.ப. 12:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.விஜயரெத்தினம், ஏ.எச்.ஏ. ஹுஸைன், எம்.எஸ்.எம்.நூர்தீன், ரீ.எல்.ஜவ்பர்கான், கனகராசா சரவணன்

மட்டக்களப்பு – ஏறாவூர், புன்னைக்குடாப் பிரதேசத்தில் ஆடைக் கைத்தொழில் பூங்கா அமைப்பதற்காக 200 ஏக்கர் காணி இலங்கை முதலீட்டாளர் சபைக்கு கையளிக்கப்பட்டுள்ளது.

இலங்கை முதலீட்டாளர் சபைக்கு உத்தியோகபூர்வமாக காணி கையளிக்கும் நிகழ்வு, மாவட்டச் செயலாளர் கே.கருணாகரன் தலைமையில், மாவட்ட செயலகத்தில் நேற்று (09) நடைபெற்றது.

இலங்கை முதலீட்டாளர் சபையின் வேண்டுகோளின் பேரில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவால் இனங்காணப்பட்ட 200 ஏக்கர் காணிகளும் அளவை செய்யப்பட்டு, ஆடைக் கைத்தொழில் பூங்கா அமைப்பதற்காக முதலீட்டார் சபைக்கு கையளிக்கப்பட்டது.

இதனூடாக வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நான்கு ஆடைக் கைத்தொழில் நிறுவனங்கள் இப்பிரதேசத்தில் அமைக்கப்படவிருப்பதுடன், இங்கு சுமார் 8 ஆயிரம் இளைஞர், யுவதிகள் நேரடியாக வேலை வாய்ப்பினைப் பெற்றுக்கொள்ளவிருப்பதோடு, இதேபோன்ற எண்ணிக்கையிலானோர் மேற்படி ஆடைக் கைத்தொழில் பூங்காவோடு ஒட்டிய மறைமுகமான தொழில் வாய்ப்புக்களைப் பெறுவர் என்று எதிர்பார்க்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இக்காணி கையளிக்கும் நிகழ்வில், இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன், காணிப்பிரிவுக்கான மேலதி அரசாங்க அதிபர் நவரூபரஞ்ஜினி முகுந்தன், காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களுக்கான பணிப்பாளர் என்.விமல்ராஜ், இலங்கை முதலீட்டாளர் சபையின் பிரதிப் பணிப்பாளர் எஸ். சற்குணலிங்கம், காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் கிளை நிர்வாகப் பொறுப்பாளர் எஸ். சுரேந்தர் உட்பட கிளை உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .