2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஏறாவூர் பலநோக்கு கூட்டுறவு வைத்தியசாலைக்கு அம்பியூலன்ஸ்

Editorial   / 2019 ஜூலை 17 , பி.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன் 

ஏறாவூர் பலநோக்கு கூட்டுறவு வைத்தியசாலைக்கு அம்பியூலன்ஸ் வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் கூட்டுறவு சங்கப் பொது முகாமையாளர் எம்.எல். அப்துல் லத்தீப் தெரிவித்தார்.
நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை   கிடைக்கப்பெற்ற இந்த அம்பியூலன்ஸ் மூலம் உடனடியாக நோயாளர் சேவைகள் இடம்பெற்றுவருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மேற்படி அம்பியூலன்ஸ் வாகனத்தைக் கையளிக்கும் நிகழ்வில் தலைமையக கூட்டுறவு ஆணையாளர் சிங்கபுலி உட்பட தலைமையக கூட்டுறவுத் திணைக்கள  அலுகலக அதிகாரிகளும்  கலந்து கொண்டனர்.
 கிழக்கு மாகாணத்தில் சிறந்த சேவையாற்றி வரும் ஏறாவூர் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம் அதன் விரிவுபடுத்தப்பட்ட சேவைகளில் பலசரக்கு மளிகைக் கடை, பூட் சிற்றி, மினி ஆடைத் தொழிலகம், எரிபொருள் நிரப்பு நிலையம், கோப் வைத்தியசாலை, வாகன சுத்திகரிப்பு நிலையம், அரிசி ஆலை, மொத்தக் களஞ்சியம் உள்ளிட்ட பல்வேறு முன்மாதிரி தொழிற்துறைச் சேவைகளைச் செய்து வருகின்றன.
மேலும் வருடாவரும் கிழக்கு மாகாணத்தில் அதன் ஊழியர்களுக்கு ஒரு மாதச் சம்பளத்தை மேலதிக போனசாக வழங்கி வருவதும் ஏறாவூர் கூட்டுறவுச் சங்கமேயாகும் என பொது முகாமையாளர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .