2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஏறாவூர் பிரதேசத்தில் 322 வேலைத்திட்டங்கள் பூர்த்தி

Editorial   / 2018 மார்ச் 13 , பி.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

கே.எல்.ரி.யுதாஜித், பேரின்பராஜா சபேஷ்

மட்டக்களப்பு, ஏறாவூர் பிரதேசத்தில்  அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதற்கென கடந்த வருடம்  அரசாங்கத்தால்   326 வேலைத்திட்டங்களுக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட சுமார் ஒரு கோடி நாற்பது இலட்சம் ரூபாய் நிதியிலிருந்து  ஒரு கோடி 35 இலட்சம் ரூபாய் செலவில்  322 வேலைத்திட்டங்கள்  பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

ஏறாவூர் நகர பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் இன்று (13) இத்தகவல் தெரிவிக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்  அலி ஸாஹிர் மௌலானா தலைமையில் நடைபெற்ற இக்குழுக்கூட்டத்தில், பிரதேச செயலாளர் வீ. யூசுப் மற்றும் திணைக்கள தலைவர்கள் பிரதிநிதிகளும்  கலந்து கொண்டனர்.

இந்நிதியில், கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி, தேசிய ஒருமைப்பாடு மற்றும் சமூக நல்லிணக்கம், பாரம்பரிய கிராமிய கைத்தொழில், கிராமிய பொருளாதார அபிவிருத்தி, வீடமைப்பு, சமூர்த்தி, போஷாக்கு, கிராமசக்தி, விளையாட்டு போன்ற துறை சார்ந்த அபிவிருத்தி திட்டங்கள்  மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதேவேளை, தற்போது அடிக்கடி அடை மழை பெய்துவருவதனால் வீதிகளில் நீர் தேக்கமடைகிறது. இதனால் பொதுமக்களிடமிருந்து முறைப்பாடுகள் வரும்வரை பார்த்திராது,  நீரை வழிந்தோடச் செய்யும் நடவடிக்கைகளை  நகர சபை துரிதமாக செயற்படுத்த வேண்டுமென, நாடாளுமன்ற உறுப்பினர் வலியுறுத்தினார்.

நகர சபையில் போதுமான வாகனங்கள் மற்றும் ஆளணி வசதிகள் இருப்பதையும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .