2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஏறாவூர்ப் பொதுச்சந்தைக்கட்ட இரண்டாம் கட்ட நிதி ஒதுக்கீடு

Editorial   / 2018 மே 29 , பி.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்

ஏறாவூர்ப் பொதுச்சந்தைக்கட்டத் தொகுதியின் இரண்டாம் கட்ட நிர்மானப் பணிகளுக்கென நகர திட்டமிடல் அமைச்சு 40 மில்லியன் ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளதாக, அமைச்சின் அபிவிருத்திப் பிரிவு மேலதிக செயலாளர் ஏ.சி.எம். நபீல், திங்கட்கிழமை (28) தெரிவித்தார்.

முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமடின் வேண்டுகோளுக்கிணங்க, சுமார் பன்னிரண்டு கோடி ஐம்பது இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் முன்னெடுக்கப்படும் இவ்வேலைத்திட்டத்துக்கு, ஆரம்பக்கட்டமாக நகர திட்டமிடல் அமைச்சு சுமார் ஆறு கோடி அறுபது இலட்சம் ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்திருந்தது.

ஏறாவூர் ஆற்றங்கரை, முகைதீன் ஜும்ஆப்பள்ளி வாசல் மற்றும் மீரா முகைதீன் பெரிய பள்ளிவாயல் ஆகிய வழிபாட்டுத்தலங்களுக்குச் சொந்தமான காணியில், பல தசாப்தகாலமாக பழைமை வாய்ந்த கட்டடத்தில் உள்ளூராட்சி மன்றத்தின் நிருவகிப்பில் இப்பொதுச்சந்தை இயங்கிவந்தது.

இந்நிலையில் புதிய கட்டடத்தொகுதியொன்றை அமைக்க, பல்வேறு தரப்பினர் முயற்சி எடுத்துக்கொண்டபோதிலும், அரசாங்கத்துக்குச் சொந்தமில்லாத காணியில் அரசாங்க நிதியின் மூலம் கட்டடம் அமைப்பதில் எதிர்நோக்கிய சிக்கல் மற்றும் பள்ளிவாயல் நிருவாகத்தினருக்கும் உள்ளூராட்சி மன்றத்துக்குமிடையே இணக்கப்பாடு எட்டப்படாமை ஆகிய பிரச்சினைகளால் கட்டடத்தை நிர்மாணிக்க முடியாதிருந்ததாக, ஏறாவூர் நகர முதல்வர் ஐ. அப்துல் வாசித் தெரிவித்தார்.

எனினும், முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் இத்தடைகளை முறியடித்து, கட்டட நிர்மாணப்பணியை ஆரம்பித்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .