2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

ஐ.நாவைத் தலையிடுமாறு கோரி ஆர்ப்பாட்டம்

Editorial   / 2018 ஒக்டோபர் 01 , பி.ப. 07:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன், வா.கிருஸ்ணா, கனகராசா சரவணன்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில், ஐக்கிய நாடுகள் சபையை நேரடியாகத் தலையிடுமாறு வலியுறுத்தி, மட்டக்களப்பில் இன்று (01) காலை ஆர்ப்பாட்டப் பேரணியொன்று நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டப் பேரணி, மட்டக்களப்பு வைத்தியசாலை முன்பாக ஆரம்பமாகி, காந்திப்பூங்காவில் நிறைவடைந்தது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் அமைப்பால் நடத்தப்பட்ட இவ்வார்ப்பாட்டப் பேரணியின் போது, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரியும் சர்வதேசம் நேரடியாக அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தினர்.

இவ்வார்ப்பாட்டத்தில், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் பல்கலைக்கழக மாணவர்கள், பொதுமக்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்ப உறவினர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட அமைப்பினர் எனப் பலரும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .