2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘ஒன்றுபட்டுச் செயற்பட முன்வரவேண்டும்’

Editorial   / 2018 ஒக்டோபர் 03 , பி.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

கே.எல்.ரி.யுதாஜித், வா.கிருஸ்ணா, கனகராசா சரவணன்

நாடு இன்றுள்ள நிலையைக் கருத்திற்கொண்டு சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் என்றும் நீலம், பச்சை, சிவப்பு என்று பிரிந்து நிற்காமல், நாட்டின் முன்னேற்றம் கருதி, அனைவரும் ஒன்றுபட்டுச் செயற்பட முன்வரவேண்டுமென, வர்த்தக வாணிபத்துறை, கைத்தொழில் அபிவிருத்தி பிரதியமைச்சர் புத்திக பத்திரன வேண்டுகோள் விடுத்தார்.

மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் வர்த்தகத்துறையை மேம்படுத்தல், வர்த்தகர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் கூட்டம், மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இன்று (03) காலை நடைபெற்றது.

வர்த்தக வாணிபத்துறை அமைச்சு ஆரம்பிக்கப்பட்டு, 50 ஆண்டுகளை பூர்த்திசெய்யவுள்ள நிலையில், இத்துறையை மேம்படுத்தி, புதிய திட்டங்களைத் தயாரிக்கும் வகையில், இக்கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது கருத்துத் தெரிவித்த பிரதியமைச்சர், இந்நாடு சுதந்திரம் அடைந்த காலம் தொடக்கம் பல சவால்களை எதிர்கொண்டுவருவதுடன்,பொருளாதார அபிவிருத்திக்கு மிகவும் ஊன்றுகோலாக இருக்கின்ற வர்த்தகத்துறையைக் கட்டியெழுப்புவதில் பல சவால்கள் இருந்து வருவதாகத் தெரிவித்தார்.

30 வருட கால யுத்தம், நாட்டை படுபாதாளத்துக்குள் தள்ளியுள்ளதெனத் தெரிவித்த அவர், அதனை மீளக்கட்டியெழுப்பும் நடவடிக்கைகளை தாங்கள் தொடர்ந்தும் முன்னெடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

அதன் ஒரு பகுதியாகவே வர்த்தகத் துறையையும் கட்டியெழுப்ப வேண்டிய அவசியமுள்ளதெனக் குறிப்பிட்ட பிரதியமைச்சர், இதனை அடிமட்டத்திலிருந்து கட்டியெழுப்ப வேண்டும் என்பதற்காக, பாடசாலை மாணவர்கள் மத்தியில், இது தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகளை ஆரம்பிக்கவிருப்பதாகத் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .