2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

ஒரு வாரத்தில் 170 பேருக்கு டெங்கு

Editorial   / 2020 பெப்ரவரி 20 , பி.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன், பேரின்பராஜா சபேஷ், எம்.எஸ்.எம்.நூர்தீன், ரீ.எல்.ஜவ்பர்கான், வ.சக்தி

மட்டக்களப்பில் ஒரு வாரத்தில் 170 பேர் டெங்குத் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனரென, மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் டெங்குக் கட்டுப்பாட்டுப் பிரிவுக்குப் பொறுப்பான வைத்தியர் வி.குணராஜசேகரம் தெரிவித்துள்ளார்.

அவரது தகவலை மேற்கோள்காட்டி, மாவட்டச் செயலக தகவல் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில், கடந்த பெப்ரவரி  07ஆம் திகதி தொடக்கம் பெப்ரவரி 14 வரையும் 170 பேர் டெங்கு நோய் தாக்கத்துக்கு உள்ளாகிய நிலையில், சிகிச்சை பெற்று வீடு சென்றுள்ளனர்.

அதன்படி, மட்டக்களப்பு - மண்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவிலும் வாழைச்சேனையில் இதுவரை தலா 25 டெங்கு நோயாளர்களும் ஆரையம்பதியில் 23 டெங்கு நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும், சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவுகளான  ஓட்டமாவடியில் 18 பேரும்,  காத்தான்குடியில் 15 பேரும்,  களுவாஞ்சிகுடியில் 14 பேரும், கோறளைப்பற்று மத்தியில் 10 பேரும்,  செங்கலடி, ஏறாவூரில் தலா 08 பேரும், வவுணதீவில் 07 பேரும், கிரானில் 06 பேரும்,  பட்டிப்பளை, வாகரையில் தலா நால்வரும், வெல்லாவெளியில் மூவரும்  டெங்குத் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .