2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

ஒரே இரவில் 3 சிசிடிவி கமெராக்கள் திருட்டு

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2018 ஜனவரி 07 , பி.ப. 08:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏறாவூர் காட்டுப்பள்ளிவாசலில் பொருத்தப்பட்டிருந்த 3 சிசிடிவி கமெராக்கள், நேற்று (06) அதிகாலை திருடப்பட்டுள்ளதாக, பள்ளிவாசல் நிர்வாகம், பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளது.

இந்நிலையில், ஏறாவூர் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர், இவ்விடயம் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இது தொடர்பில், ஏறாவூர் காட்டுப்பள்ளிவாசல் தலைவர்  எம்.எல். அப்துல் லத்தீப் தெரிவித்ததாவது,

'காட்டுப்பள்ளிவாசலில், முன்னும் பின்னுமாக 3 பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமெராக்களே, விஷமிகளால் திருடப்பட்டுள்ளன. ஊர் மத்தியில் இது ஒரு முக்கியத்துவம் வாய்ந்த இடமென்பதால், இங்கு கமெராக்கள் பொருத்தப்பட்டிருந்தன.

'இவ்வாறு கமெரா பொருத்தப்பட்டிருந்தது, சமூக விரோத விஷம சக்திகளுக்கு இடைஞ்சலாக அமைந்துள்ளமையாலேயே, அவைகளைத் திருடியிருக்கிறார்கள்' என்றார்.

இதேவேளை, அன்றைய தினம் புத்தளம் பகுதியிலிருந்து பள்ளிவாசல் கட்டட நிதிக்காக பணம் வசூல் செய்ய வந்திருந்தவரின் கைவசமிருந்த ஆறாயிரம் ரூபாய் பணத்தையும், கமெராக்களை அபகரித்தவர்கள் திருடிச் சென்றிருக்கிறார்கள்' என்றார்.

இந்தப் பள்ளிவாசல், இதற்கு முன்னரும் உடைக்கப்பட்டதோடு, பெரிய மின் விளக்குகள் உள்ளிட்ட பெறுமதிவாய்ந்த பல பொருட்கள், நான்கு தடவைகள் திருடப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், காட்டுப்பள்ளிவாசல் நாற்சந்தியின் வெவ்வேறு இடங்களிலுள்ள கடைகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமெராக்களும், இதற்கு முன்னர் 3 வெவ்வேறு சந்தர்ப்பங்களில் திருடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .