2024 மார்ச் 28, வியாழக்கிழமை

ஓட்டமாவடி தவிசாளருக்கு எதிராக மீராவோடை மக்கள் பேரணி

Editorial   / 2019 ஏப்ரல் 17 , பி.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எம்.அஹமட் அனாம், ஆர்.ஜெயஸ்ரீராம்

ஓட்டமாவடி பிரதேச சபை பிரிவிலுள்ள மீராவோடை வாராந்த சந்தை, ஒவ்வொரு வாரமும் நடைபெற வேண்டுமெனக் கோரி, ஓட்டமாவடி பிரதேச சபைத் தவிசாளருக்கு எதிராக, மீராவோடை மக்கள், மீராவோடையில் இன்று (17) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், பேரணியொன்றையும் முன்னெடுத்தனர்.

மீராவோடை மீரா ஜும்ஆ பள்ளிவாசல், மீராவோடை வர்த்தக சங்கம், பொது அமைப்புகள் ஆகியன இவற்றை ஏற்பாடு செய்திருந்தன.

இந்தச் சந்தையை, மாதத்தில் முதலாவது வாரமும், இறுதியாக வருகின்ற மூன்றாவது வாரமும், வாராந்த சந்தையாக நடத்துமாறு,  ஓட்டமாவடி பிரதேச சபையால்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், மேற்படித் தீர்மானத்தைத் தாம் ஏற்றுக்கொள்ளமாட்டோமெனத் ​ தெரிவித்து, வாராந்த சந்தையை, பொதுமக்கள் தொடர்ந்தும் நடத்தி வந்தனர்.

இந்நிலையில், இதைத் தடுத்து நிறுத்துமாறு கோரி, ஓட்டமாவடி பிரதேச சபை, வாழைச்சேனை மாவட்ட நீதவான்  நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளது.

இதனையடுத்தே, மீராவோடை வாராந்த சந்தை தொடர்ந்தும் நடைபெற வேண்டுமென, மீராவோடை பாடசாலை வீதியில் ஆரம்பித்த இன்றைய பேரணி, சந்தை வீதி வழியாக, மீராவோடை மீரா ஜும்ஆ பள்ளிவாசலில் நிறைவடைந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X