2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

கஞ்சாத் தோட்டம் கண்டுபிடிப்பு

Editorial   / 2020 ஏப்ரல் 07 , மு.ப. 08:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எம்.அஹமட் அனாம்

செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சித்தாண்டி, சந்தணமடு காட்டுப் பகுதியில் கஞ்சாத் தோட்டமொன்றைக் கண்டுபிடித்துள்ள வாழைச்சேனை விசேட அதிரடிப் படையினர், கசிப்பு கொள்கலன் ஒன்றையும் நேற்று முன்தினம் கைப்பற்றியுள்ளனர்.

வாழைச்சேனை கடதாசி ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, 08 இராணுவ புலனாய்வு அதிகாரிகளும் விசேட அதிரடிப் படையினரும் மேற்கொண்ட சுற்றிவளைப்பில், சந்தணமடு காட்டுப் பகுதியில் 16 கஞ்சா செடிகள் வளர்த்து வந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

அத்தோடு,  வேரொரு இடத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 210 லீற்றல் கசிப்பு கொள்கலன் ஒன்றும்   கைப்பற்றப்பட்டுள்ளது.

இவற்றுடன் தொடர்புடைய நபர்கள் தப்பியோடியுள்ளதுடன், இவர்கள் தொடர்பான விசாரணைகளை இராணுவ புலனாய்வு அதிகாரிகளும் விசேட அதிரடிப் படையினரும் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X