2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

'கடந்த ஆட்சிக்கால பாணியில் அட்டகாசம்'

ஆர்.ஜெயஸ்ரீராம்   / 2018 ஏப்ரல் 18 , பி.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசியல் காரணங்களுக்காக, வாகரை பிரதேச சபை உறுப்பினர் ஒருவரின் உடமைகள் சேதப்படுத்தப்பட்டன எனக் கருதப்படும் சம்பவம் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன், "கடந்தகால ஆட்சிக்காலப் பாணியில் அட்டகாசம் புரிந்துள்ளனர்" எனக் குறிப்பிட்டார்.

வாழைச்சேனை, கிண்ணையடி, மில்லர் விளையாட்டுக் கழகத்தின் சித்திரைப் புத்தாண்டு விழாவில் உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அத்துடன், “வாகரைப் பிரதேச சபையை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி அமைப்பதற்கு உதவி செய்தமைக்காக தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த வாகரை பிரதேச சபை உறுப்பினர் சந்திரமோகன் என்பவரது படகும் வலைகளும் எரிக்கப்பட்டு பழிவாங்கிய செயற்பாடு இடம்பெற்றுள்ளது.

“இச்செயற்பாட்டை, தோற்றவர்கள் செய்தனரென அறிய முடிகின்றது. உபகரணத்தை அழித்துவிட்டாலும், அவரது உழைப்பின் மூலமாக 25 பேர் வாழ்வாதாரத்தைப் பெற்றனர். எனவே, தேர்தலை மறந்து, வட்டாரத்தின் அபிவிருத்திக்காக ஒன்றுபடுவோம்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .