2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கண்டி நகருக்கு கிழக்கிலிருந்து உலருணவுப் பொருட்கள்

Editorial   / 2018 மார்ச் 12 , பி.ப. 03:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேரின்பராஜா சபேஷ், எம்.எஸ்.எம்.நூர்தீன், ஏ.எச்.ஏ. ஹுஸைன்

கண்டி மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையின்போது பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு வழங்குவதற்கென, மட்டக்களப்பு - ஏறாவூர்ப் பிரதேசத்தில் உலர் உணவுப்பொருட்களைச் சேகரிக்கும் பணிகள், இன்று (12) நடைபெற்றன.

அகில இலங்கை ஜம்இய்யத்து உலமா சபையின் ஏறாவூர்க்கிளை, பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் மற்றும் பீ.எஸ்.பீ நண்பர்கள் வட்டம் ஆகிய அமைப்புகள் இணைந்து, இப்பணிகளை முன்னெடுத்துள்ளன.

பிரதேச பள்ளிவாசல்கள் மூலமாகவும் வீடு வீடுகளாகவும் சேகரிக்கப்பட்ட உலருணவுப் பொருட்கள் பொதிசெய்யப்பட்டு, கண்டி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளுக்கும் லொரிகள் மூலமாக எடுத்துச்செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  

அரிசி, சீனி, பருப்பு, மீன் டின், குழந்தைப் பால்மா உள்ளிட்ட பொருட்கள் பிரதேச மக்களிடமிருந்து சேகரிக்கப்படுவதாக, சம்மேளனத்தின் செயலாளர்     எம்எல். செய்யத் அஹமட் தெரிவித்தார்.

இப்பணியில் மேலும் பல பொதுநல அமைப்புகளின் பிரதிநிதிகள் இணைந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .