2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

கதிர்காமத்துக்கான பாதயாத்திரை வாழைச்சேனையை வந்தடைந்தது

Editorial   / 2020 ஜூன் 11 , பி.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்

திருகோணமலையில் இருந்து ஆரம்பித்த கதிர்காமத்துக்கான பாதை யாத்திரைக் குழுவினர், மட்டக்களப்பு - வாழைச்சேனையை  இன்று (11) வந்தடைந்தனர்.

மே மாதம் 21ஆம் திகதி, திருகோணமலை - லங்கா பட்டினம் முருகன் கோவிலிலிருந்து பாதயாத்திரையை ஆரம்பித்திருந்த 35 பேர் கொண்ட குழுவினரே, 11 நாள்கள்  பின்னர் வாழைச்சேனை கயிலாய பிள்ளையார் கோவிலை இவ்வாறு வந்தடைந்தனர்.

கதிர்காமத்துக்கு கொண்டு செல்ல தூக்கிய வேலை இடையில் வைக்க முடியாது இருந்தபோதும் கதிர்காமத்துக்குச் செல்லமுடியாதெனத் தடுக்கப்பட்டால் மட்டக்களப்பு தாந்தா முருகன் ஆலையம் சென்று தரித்து நிற்கவுள்ளவும் அதன் பின் பாதையாத்திரை ஆரம்பித்தால், அங்கிருந்து தொடர்ந்து காட்டுவழியாக கதிர்காமத்துக்குச் சென்றடையவுள்ளதாகவும் இந்த  பாதையாத்திரைக் குழுவினர் தெரிவித்தனர்.

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக, யாழ்ப்பாணம் செல்வச் சந்நிதி கோவிலிலிரந்து ஆரம்பித்த பாதயாத்திரை 24 மணித்தியாலயத்தில் நிறுத்தப்பட்டிருந்தது.

எனினும், பாதையாத்திரை தொடர்பாக எந்தவோர் அறிவித்தலும் அரசாங்கத்தால் இதுவரை விடுக்கப்படவில்லையென்பது சுட்டிக்காட்டத்துக்கது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .