2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கபிலநிற தண்டுத்தத்தியால் மட்டக்களப்பில் வேளாண்மை பாதிப்பு

Editorial   / 2018 டிசெம்பர் 27 , பி.ப. 02:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடிவேல் சக்திவேல் 

தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள பெரும்போக வேளாண்மைச் செய்கையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் கபிலநிறத் தண்டுத்தத்தியின் (அறக்கொட்டி) தாக்கும் அதிகரித்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டம் படுவாங்கரைப் பகுதியில் மழை நீரை நம்பி மேற்கொள்ளப்படும் பெரும்போக வேளாண்மைச் செய்கையில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வருடம் வேளாண்மைக்கு மஞ்சள் நிறமான ஒருவித நோயும், அதிகளவு களைகளும், காணப்படும் அதேவேளை வேளைண்மைச் செய்கையை அழிக்கும் பாரிய நோயாகக் காணப்படும் கபிறநிறதத் தண்டுத்தத்தி (அறக்கொட்டி) இன் தாக்கம் அனைத்து வயல் நிலங்களிலும் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளனர்.

இப்பூச்சி இனத்தை இல்லாதொழிப்பதற்காக பலவகையான கிருமிநாசினிகள் பாவித்தும், அவற்றைக் கட்டுப்படுத்த முடியாதுள்ளதாகவும், இதனால் விவசாயிகள் பாரிய நட்டத்தை எதிர்நோக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் படுவாங்கரைப் பகுதிவாழ் விவவாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .