2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘கம்பெரலிய திட்டத்தில், தமிழ்க் கிராமங்கள் புறக்கணிப்பு’

Editorial   / 2019 பெப்ரவரி 25 , பி.ப. 06:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேரின்பராஜா சபேஷ், க.விஜயரெத்தினம்

அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டுவரும் கம்பெரலிய துரித கிராமிய அபிவிருத்தித் திட்டத்தில், மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்புத் தொகுதி, முற்றாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது தொடர்பில், ஊடகங்களுக்கு இன்று (25) அவர் அனுப்பியுள்ள அறிக்கையிலேயே, அவர் இவ்வாறு குற்றஞ்சாட்டியுள்ளார்.

அந்த அறிக்கையில், அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டுவரும் கம்பெரலிய திட்டத்தில், பட்டிருப்புத் தொகுதி உட்பட பல தமிழ்க் கிராமங்கள் புறக்கணிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாதெனக் குறிப்பிட்டுள்ளார்.

தொகுதிக்கு 200 மில்லியன் ரூபாய் என்ற அமச்சரவைத் தீர்மானம் கொண்டுவரப்பட்ட போதும், கடந்த 2018இல், பட்டிருப்புத் தொகுதியில் முன்னெடுக்கப்பட்ட 25 வேலைத்திட்டங்களுக்கு, மொத்தமாக 28.5 மில்லியன் ரூபாயே ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் போரதீவுப்பற்றின் 6 வேலைத்திட்டங்களுக்காக, ரூ. 7 மில்லியனும் மண்முனை தென் எருவில்பற்றுப் பிரதேசத்துக்கு, 12 வேலைத்திட்டங்களுக்காக ரூ.14 மில்லியனும், பட்டிப்பளை பிரதேசத்தின் 7 வேலைத்திட்டங்களுக்காக ரூ.7.5 மில்லியனும் ஒதுக்கப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ள அவர், தொகுதிக்கு ரூ.200 மில்லியன் என்றால், மிகுதி 171.5 மில்லியன் ரூபாய்க்கு என்ன நடந்ததெனக் கேள்வியேழுப்பியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வழிநடத்தும் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கமே, ஆளும் அரசாங்கமாகவுள்ள நிலையில், கம்பெரலிய திட்டத்தில், பட்டிருப்புத் தொகுதி மிக மோசமாகப் புறக்கணிக்கப்பட்டு உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள பிரசாந்தன், பாதிக்கப்படும் பட்டிருப்புத் தொகுதி மக்களுக்கும் ஏனைய தமிழ்க் கிராமங்களுக்கும் தீர்வு கிடைக்கவில்லையாயின், பொறுப்புமிக்க அரசியல் கட்சி என்ற வகையில், இவற்றை மக்கள் மத்தியில் கொண்டுசென்று தெளிவுபடுத்தவுள்ளதாகவும், மேலும் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .