2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கரடியனாறு விவசாய பயிற்சி நிலையத்துக்கு ரூ.25 மில்.ஒதுக்கீடு

Editorial   / 2018 மே 14 , பி.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 கே.எல்.ரி.யுதாஜித், பேரின்பராஜா சபேஷ்

புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கரடியனாறு விவசாய சேவைக்காலப் பயிற்சி நிலையத்துக்கு, அதன் அபிவிருத்தி வேலைகளுக்காக ஜனாதிபதியால் 25 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சரின் பாரிய முயற்சியின் பலனாக புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கரடியனாறு விவசாய சேவைக்காலப் பயிற்சி நிலைய கட்டடத் தொகுதி, கடந்தாண்டு ஓகஸ்ட் மாதம் 31ஆம் திகதி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் திறந்து வைக்கப்பட்டது.

இதன்போது, முன்னாள் அமைச்சர் துரைராசசிங்கம், இப்பயிற்சி நிலையத்தின் அபிவிருத்திக்காக இன்னும் 89 மில்லியன் ரூபாய்கள் தேவைப்படுகின்றன என விடுத்த வேண்டுகொளுக்கிணங்க, ஜனாதிபதியால் இந்நிதி கட்டம் கட்டமாக ஒதுக்கீடு செய்யப்படும் எனவும், இச்சேவைக்காலப் பயிற்சி நிலையத்தை கன்னொருவ ஆராய்ச்சி நிலையம் போன்று ஆக்குவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்வதாகவும் உறுதிமொழியளிக்கப்பட்டது.

அதற்கிணங்க ஜனாதிபதியால் முதற்கட்டமாக, 25 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, மாவட்ட செயலாளரூடாக அமுலாக்கம் செய்வதற்காக, ஜனாதிபதி செயலகத்தால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X