2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

கலைஞர்களின் நன்மைக் கருதி ’கலைக் கிராமம்’ வீட்டுத் திட்டம்

Editorial   / 2018 ஜூலை 17 , பி.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

 

மட்டக்களப்பு மாவட்டத்தில், கலைத்துறையில் ஈடுபட்டுள்ளவர்களின் நன்மைகருதி, 25 வீடுகளை உள்ளடக்கிய வீட்டுத்திட்டம் ஒன்றை, "கலைக் கிராமம்" என்ற பெயரில் நிர்மாணிக்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் ஆரம்பகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வீடமைப்பு அமைச்சு, உயர்கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களம் ஆகியவற்றின் அனுசரணையுடன்,இவ்வீடமைப்புத் தொகுதி நிர்மாணிக்கப்படவுள்ளது.

வறிய நிலையிலுள்ள பல்துறை சார்ந்த கலைஞர்கள் இவ்வீட்டுத் திட்டத்தின் ஊடாக நன்மையடைவதோடு, நாட்டின் கலைத்துறையினூடான அவர்களது அர்ப்பணிப்பைத் தொடர்ந்து பெற்றுக்கொள்ளவும் இது வாய்ப்பாக அமையுமென தெரிவிக்கப்படுகின்றது.

கலைஞர்கள் என்ற அடிப்படையில், கலைகளில் மிளிரும் மாற்றுத் திறனாளிகளும் இந்தத் திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளனர் என, அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .