2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

கல்முனை பொதுச்சந்தையில் கோழி இறைச்சியின் விலை அதிகரிப்பு

ரீ.கே.றஹ்மத்துல்லா   / 2018 ஓகஸ்ட் 05 , பி.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்முனை  பொதுச் சந்தையில் கோழி இறைச்சி அதிக விலையில்  விற்கப்படுவதாகவும் இதனைக் கட்டுப்படுத்த கல்முனை மாநகர சபை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கல்முனை மாநகர சபையிடம் பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இதற்கமைய, கல்முனை பொதுச் சந்தையில் ஒரு கிலோ புரொய்லர் கோழி இறைச்சி ரூபா 550 விற்கப்படுவதுடன்,  ஒரு கிலோ முட்டைக் கோழி அல்லது சிவப்புக் கோழி இறைச்சி ரூபா 800க்கு விற்பனை செய்யப்படுகிறதெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன்,  கல்முனைப் பொதுச் சந்தையிலுள்ள கோழி இறைச்சிச் கடைகளில் விலைப்பட்டியல் மக்களின் பார்வைக்கு வைக்கப்படுவதில்லையெனவும் இதனால் விற்பனையாளர்கள் தீர்மானிக்கும் விலைக்கே கொள்வனவு செய்ய நேரிடுவதாகவும் நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.

எனவே, கல்முனை பிரதேசத்தில் பொருட்கள் அதிகரித்த விலையில் விற்கப்படுவதைக் கட்டுப்படுத்துவதுத் தொடர்பில் அதிகாரிகள் உரிய நடவடிக்கை  எடுக்கவேண்டுமெனவும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .