2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

’கல்விசார் நிலையங்களை விடுவிக்குக’

Editorial   / 2018 ஓகஸ்ட் 28 , பி.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

கே.எல்.ரி.யுதாஜித், பேரின்பராஜா சபேஷன்

கிழக்கு மாகாணத்தில், பொலிஸாரினதும் படையினரினதும் வசமுள்ள கல்விசார் நிலையங்கள் விரைவாக விடுவிக்கப்பட வேண்டும் என்றும், அபிவிருத்திச் செயற்பாடுகளின் போது, கிழக்கு மாகாணத்தின் மீதும் கூடுதல் கவனம் எடுக்கப்பட வேண்டும் என்றும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

வடக்கு - கிழக்கு அபிவிருத்தி தொடர்பான செயலணி, ஜனாதிபதி செயலகத்தில், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனின் தலைமையில் நேற்று (27) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், மட்டக்களப்பு, கொக்கட்டிச் சோலை பொலிஸார் வசமுள்ள மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்துக்குச் சொந்தமான பட்டிப்பளை ஆசிரியர் மத்திய நிலையம், முறக்கொட்டான்சேனை ஆரம்பக் கல்விக்கான பாடசாலை, குருக்கள்மடம் கலைவாணி வித்தியாலயக் கட்டடம் போன்றன விரைவாக விடுவிக்கப்பட வேண்டுமென்றும் அவர் இதன்போது கோரிக்கை விடுத்தார்.

இதனை விரைவாக நடைமுறைப்படுத்துவதாக, ஜனாதிபதி இதன் போது உறுதியளித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து, உன்னிச்சைக்குள குடிநீர் விநியோகத்தின் போது, உன்னிச்சை, உன்னிச்சைக்கு அண்மையிலுள்ள கிராமங்கள் கவனிக்கப்படாமை, கைத்தொழிற்சாலைகள் திறக்கப்பட வேண்டிய அவசியம், தொழில்வாய்ப்பின்மை, வெளிமாவட்டங்களிலிருந்து மட்டக்களப்பு மாவட்டத்துக்குச் சிற்றூழியர்கள் நியமனம் போன்ற விடயங்கள் தொடர்பிலும், நாடாளுமன்ற உறுப்பினரால் விளக்கமளிக்கப்பட்டிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .