2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் பதற்றம்

வா.கிருஸ்ணா   / 2018 ஜூலை 26 , பி.ப. 01:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எருவில் பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்றின் போது, பொலிஸார் பக்கச்சார்பாக செயற்பட்டதாகக் கூறி, அப்பகுதி மக்கள், களுவாஞ்சிக்குடிப் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.

எருவில் பிரதான வீதியில் நேற்று முன்தினம் (24) மாலை வானொன்று, மோட்டார் சைக்கிளொன்றை மோதி, பின்னர் அப்பகுதியில் நின்ற பெண்ணொருவர் மீதும் மோதியுள்ளது.

இதன்போது, ஆறு வயதுச் சிறுமி உட்பட மூன்று பேர் படுகாயமடைந்த நிலையில், களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த சிறுமியும் அவரது தந்தையும் பெண்ணொருவருமாக மூன்று பேர் இதன்போது படுகாயமடைந்துள்ளனர்.

இது தொடர்பிலான விசாரணைகளை களுவாஞ்சிக்குடிப் பொலிஸார் மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் பக்கச்சார்பாக செயற்படுவதாகக் கூறி, எருவில் பிரதேச மக்கள் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.

எனினும், குறித்த வான் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமெனவும் களுவாஞ்சிக்குடிப் பொலிஸார் வழங்கிய உறுதிமொழியையடுத்து, அங்கு நின்றவர்கள் கலைந்துசென்றனர்.

இதேவேளை, இச்சம்பவத்தை வேறு திசைக்கு மாற்றும் நடவடிக்ககைளை களுவாஞ்சிக்குடிப் பொலிஸார் மேற்கொண்டுவருவதாக மக்கள் குற்றஞ்சாட்டினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .