2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

காட்டுயானை தாக்கி இரு மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி

Editorial   / 2019 ஜூலை 15 , பி.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடிவேல் சக்திவேல்

  மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள  தும்பங்கேணி இளைஞர் விவசாயத்திட்ட கிராத்தினுள்  நேற்றுஅதிகாலை காட்டுயானையொன்று   புகுந்து துவம்சம் செய்து ,அங்கிருந்த   தென்னை, வாழை, மரவள்ளி உள்ளிட்ட பல பயன்தரும் பயிரினங்களையும் அழித்துள்ளன.இதேவேளை,குளிப்பதற்காகச் சென்ற இரு மாணவிகள் மீது  அந்த காட்டுயானை தாக்குதல் நடாத்திவிட்டுச் சென்றுள்ள சம்பவமொன்றும் இடம்பெற்றுள்ளது.  3 ஆம் தரத்தில் கல்வி கற்கும் 8 வயதுடைய சந்திரகுமார் கிசாணி மற்றும் 9 ஆம் தரத்தில் கல்வி கற்கும் 14 வயதுடைய கோபலபிள்ளை ஜெயனுஜா ஆகிய இரு மாணவிகளும் தாக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் 3 ஆம் தரத்தில் கல்வி கற்கும் 8 வயதுடைய சந்திரகுமார் கிசாணி எனும் மாணவி களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிக்கிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். மற்றைய மாணவி சிகிச்சை பெற்று வீடுதிரும்பியுள்ளாதாக அப்பகுதி அரசாங்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அதிகாலையில் கிராமத்தினுள் புகுந்த காட்டுயானையை கிராமத்தைவிட்டு வெளியேற்றமுடியாமல் மக்கள் அல்லோல கல்லோலப்பட்டுள்ளனர். பின்னர் கிராமத்திலுள்ளவர்கள், கிராமத் தலைவர்கள் உள்ளிட்டோர் ஒன்றுகூடி தீப்பந்தம் ஏந்தியும், பட்டாசு மற்றும் யானைவெடி கொளுத்தியும் யானையை வெளியேற்றியுள்ளனர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .