2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கறுப்புத் துணி கட்டி கவனயீர்ப்பு

Editorial   / 2019 பெப்ரவரி 04 , பி.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேரின்பராஜா சபேஷ், அப்துல்சலாம் யாசீம்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், கிழக்குப் பல்கலைக்கழக வந்தாறுமூலை வளாக முன்றலில் ஒன்றுகூடி, தமது நெற்றியில் கறுப்புத் துணியைக் கட்டி, இன்று (04) கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாட்டின் தேசிய தினத்தை, கறுப்புத் தினமாகப் பிரகடனப்படுத்திய காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், இங்கு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.

“ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 40ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில், இலங்கை அரசாங்கத்துக்கு மேலும் கால அவகாரம் கொடுக்காமல், சர்வதேசம் நேரடியாகத் தலையிட்டு, எமது பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெற்றுத்தர வேண்டும்.

“மன்னாரிலே மனிதப் புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பான விரிவான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்.

“நெடுங்காலமாகத் தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டவேண்டும்.

“முகாம்கள் அமைக்கப்பட்டு, உயர்பாதுகாப்பு வலயங்களாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள எமது உறவுகளின் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும்” உள்ளிட்ட கோரிக்கைகளை அவர்கள் இங்கு முன்வைத்தனர்.

வடக்கு, கிழக்கு வலிந்து காணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற கவனயீர்ப்புப் போராட்டத்தில், கிழக்கு மாகாணத்திலிருந்து உறவுகளைத் தொலைத்த தாய், தந்தை, சகோதரர்கள், உறவினர்கள், கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் பங்கேற்றனர்.

இதேவேளை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்துக்கு முன்னாலும் இன்று கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .