2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

காணி தொடர்பான வழக்கை எதிர்கொள்வதற்கு ஆயத்த நடவடிக்கை

வா.கிருஸ்ணா   / 2018 மார்ச் 20 , பி.ப. 01:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கிரான்குளம் தர்மபுரத்தில், தனிநபர்கள் இருவரால் 22 குடும்பங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுள்ள காணி தொடர்பான வழக்கை எதிர்கொள்வதற்கான நடவடிக்கையை, கிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் மேற்கொண்டுள்ளார்.

கிரான்குளம், தர்மபுரத்தில் கடந்த 35 வருடமாக வசித்துவரும் 22 குடும்பத்தினர் வசிக்கும் காணி, தமக்குச் சொந்தமென யாழ். மற்றும் மொரட்டுவைப் பகுதிகளில் இருந்து இரண்டு பெண்களால் உரிமை கோரப்பட்டு, நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் குறித்த பகுதி மக்கள், கிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் கோவிந்தன் கருணாகரமின் கவனத்துக்குக் கொண்டுசென்றதைத் தொடர்ந்து, அதற்கு எதிரான சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பில், அப்பகுதிக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

குறித்த சந்திப்பில், மட்டக்களப்பு மாவட்டத்தின் சிரேஷ்ட சட்டத்தரணி கே.சிவநாதனும் இணைந்திருந்தார்.

சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பான ஏற்பாடுகள் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டன.

1980 காலப்பகுதிகளுக்கு பின்னர் இப்பகுதியில் மக்கள் குடியமர்த்தப்பட்டு வசித்துவருவதுடன், இப்பகுதியில் நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் குடியேற்றப்பட்டு, சுமார் 35வருடத்துக்கு மேலாக வசித்துவருகின்றனர்.

இவர்களில் 22 குடும்பங்களுக்கு எதிராகவே வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், ஏனையவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டலாம் எனவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .