2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

‘காண்பியக்கலை கண்காட்சி’

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2018 ஜூலை 12 , பி.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

போரின் வடுக்களைப் பொது வெளியில் புரிய வைக்கும் காண்பியக்கலை கண்காட்சி, மட்டக்களப்பு – பதுளை வீதியை அண்டியுள்ள பன்குடாவெளியில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (15) காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை இடம்பெறவுள்ளதாக, கிழக்குப் பல்கலைக்கழகத்தின் விபுலாநந்தா அழகியற் கற்கைகள் நிறுவகப் பணிப்பாளர் கலாநிதி சிவஞானம் ஜெயசங்கர் தெரிவித்தார்.

பன்குடாவெளியில், ஆளரவமற்றும் சிதிலமடைந்தும் வெளவால்களின் இருப்பிடமாகவும், பட்டிகள் களைப்பாறும் இடமாகவும் அமைந்திருக்கும் கண்ணாடிப்போடியார் இல்லத்தில், ஓவியர் சுசிமன் நிர்மலவாசனது, காண்பியக் காட்சிபடுத்தல்கள் நிகழ்த்தப்படவிருப்பதால், அதனைப் பார்வையிட வருமாறு ஆர்வலர்களுக்கு பொது அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது பற்றி ஓவியர் சுசிமன் நிர்மலவாசன் குறிப்பிடும் போது, தன்னைச் சுற்றியிருந்த யுத்தமே, தனது ஓவியக் கருப்பொருளாக இருந்து வருவதாகவும்  கலைப்படைப்பின் கருத்தியலுடன் தொடர்புடைய இடங்களில் அக்கலைப்படைப்புகள்  காட்சிப்படுத்தும்போது, அதன் அர்த்தம் இன்னும் மிகுதியாகும் எனும் எண்ணம் 2003இல் தனக்கு உருவானதாகவும் 2018இல் அது சாத்தியமாகின்றது என்றும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .