2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் ஆளணி அதிகரிப்பு

Editorial   / 2018 செப்டெம்பர் 06 , பி.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன், ஹஸ்பர் ஏ ஹலீம், எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் நீண்டகாலமாக நிலவி வந்த ஆளணிப் பற்றாக்குறையை நிவர்த்திசெய்ய, முழு வீச்சில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதென, நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

காத்தான்குடி தள வைத்தியசாலையின் ஆளணிப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து, ஆளணியை அதிகரிப்பது சம்பந்தமாக, பொது நிர்வாக அமைச்சு, தேசிய சம்பளங்கள் பதவியணிகள் ஆணைக்குழு, நிதியமைச்சின் முகாமைத்துவ சேவை திணைக்களம் என்பவற்றிடம், இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தொடர்ந்து விடுத்து வந்த கோரிக்கைக்கு அமைய, அதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, காத்தான்குடி தள வைத்தியசாலையில் பல புதிய வெற்றிடங்கள் உருவாக்கப்பட்டு, மேலதிக ஊழியர்கள் நியமிப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், 5 வைத்திய ஆலோசகர்கள், 32 வைத்திய நிபுணர்கள், 50 தாதிமார்கள், 45 சிற்றூழியர்கள் என, மொத்தம் 196 ஊழியர்களைக் கொண்டதாக, வைத்தியசாலையின் ஆளணி அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், “காத்தான்குடி தள வைத்தியசாலையில் வைத்தியர்கள், தாதிமார்கள், சிற்றூழியர்கள் பற்றாக்குறை நிலவுவதாக எனது கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது. இது விடயம் சம்பந்தமாக, நிதி அமைச்சின் முகாமைத்துவ சேவை திணைக்களத்துக்கு நான் தொடர்ச்சியாக விடுத்து வந்த கோரிக்கைக்கு அமைய, அதற்கான அனுமதி கிடைத்துள்ளது” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .