2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

காத்தான்குடி குழு மோதல்; 9 பேருக்கு பிணை

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2017 ஒக்டோபர் 17 , பி.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

காத்தான்குடியில் ஏழு மாதங்களுக்கு முன்னர் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 9 பேருக்கு, மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

இவர்களின் வழக்கு, நீதிபதி எம்.வை.இர்ஸதீன் முன்னிலையில் இன்று (17) எடுத்துக் கொள்ளப்பட்ட போது, இந்த 9 பேருக்கும் தலா 75,000 ரூபாய் வீதம் இரண்டு பேரின் சரீரப்பிணையும், தலா ஒருவருக்கு 25,000 ரூபாய் ரொக்கப்பணமும் செலுத்தி பிணையில் செல்ல நீதிபதி அனுமதித்தார்.

அத்தோடு, இவர்கள் வெளிநாடு செல்ல முடியதெனவும் இவர்களின் கடவுச்சீட்டுக்களை நீதிமன்றில் ஒப்படைக்க வேண்டும் எனவும் மாதத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமை பொலிஸ் நிலையம் சென்று கையொப்பமிட வேண்டுமெனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

தேசிய தௌஹீத் ஜமாஅத்தின் பிரசாரக் கூட்டமொன்று, காத்தான்குடி ஆறாம் குறிச்சி அலியார் சந்தியில் கடந்த மார்ச் மாதம் 10ஆம் திகதியன்று இடம்பெறவிருந்த நிலையிலேயே, அன்றைய தினம் இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றது.

இந்த மோதலின் போது, கத்திகுத்து மற்றும் கல் வீச்சு சம்பவங்களில் இரு குழுக்களில் இருந்தும் மூவர் காயமடைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .