2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

காத்தான்குடி தொடர்பில் விசேட கலந்துரையாடல்

Editorial   / 2017 ஒக்டோபர் 23 , பி.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன், எம்.எஸ்.எம்.நூர்தீன்

தற்போதிருக்கும் காத்தான்குடி நகர சபையை, மாநகர சபையாகவும், காத்தான்குடிப் பிரதேசத்தில் புதிய பிரதேச சபை ஒன்றையும் உருவாக்கு வகையில் விசேட கலந்துரையாடலொன்று, புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தலைமையில் நேற்று நடைபெற்றுள்ளது.

காத்தான்குடி மாநகர சபையை உருவாக்குதல் மற்றும் புதிய பிரதேச சபையை உருவாக்குவது தொடர்பான அறிக்கை அவரசமாக சமர்ப்பிக்கப்பட வேண்டியிருப்பதால் மேற்படிக் கலந்துரையாடல் , ஹிஸ்புல்லாஹ்வின் கொழும்பு இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில், காத்தான்குடி நகர சபையின் முன்னாள் முதல்வர் எஸ்.எச்.எம். அஸ்பர், நகர சபை முன்னாள் உறுப்பினர் ரவூப் அப்துல் மஜீட், காத்தான்குடி பிரதேச செயலகத்தின் சார்பில் தலைமை கிராம சேவக உத்தியோகத்தர் எம். ஜறூப், காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சார்பில் சகோதரர் எம். பஹ்மி,  இராஜாங்க அமைச்சரின் இணைப்புச் செயலாளர் றுஸ்வின் மொஹமட் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேற்படி கலந்துரையாடலில் எல்லை நிர்ணயம் உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டதுடன், தீர்மானங்களும் எடுக்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .