2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

காத்தான்குடி பிரதேசம் டெங்கு அபாய வலயமாக பிரகடனம்

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2018 ஜனவரி 04 , பி.ப. 02:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் இன்று (04) நடைபெற்ற உயர் மட்டக் கூட்டத்தின் போது, காத்தான்குடி பிரதேசம், டெங்கு அபாய பிரதேசமாகப் பிரகடனப்படுத்தப்பட்டது.

காத்தான்குடி பிரதேச செயலாளர் யு.உதயசிரீதர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் யு.எல்.நசிர்தீன் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் அத்தியட்சகர் டொக்டர் எம்.எஸ்.ஜாபீர், காத்தான்குடி நகர சபை செயலாளர் திருமதி றிப்கா ஷபீன், காத்தான்குடி பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் எம்.எம்.ஜரூப், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், கிராம உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பொலிஸார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

காத்தான்குடியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் தொகை அதிகரித்து வருவதால், காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவை டெங்கு அபாய பிரதேசமாக பிரகடனப்படுத்தப்படுவதென, இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

கடந்த ஒரு வாரத்தில், காத்தான்குடியில் 600 வீடுகளில் டெங்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 100 வீடுகளில் டெங்கு நுளம்புக் குடம்பிகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .