2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

‘காலம் கனிய தேர்தலுக்கு முன்னர் பிரிந்தவர் இணைவர்’

Editorial   / 2017 டிசெம்பர் 14 , பி.ப. 02:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேரின்பராஜா சபேஷ், எஸ். பாக்கியநாதன்

“எங்களது சகோதரரொருவர் பிரிந்து சென்றுள்ளார். காலம் இன்னும் போகவில்லை. வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு முன்பதாக அவர்கள் எங்களோடு சேர்ந்துவிடலாம்” என, இலங்கைத் தமிழரசுக் கட்சிச் பொதுச் செயலாளர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.

மண்முனைப் பற்று, கோரளைப் பற்று, செங்கலடிப் பற்று மற்றும் செங்கலடி நகரம் ஆகிய சபைகளுக்கான வேட்பு மனுவை, மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில் இன்று (14) தாக்கல் செய்த பின்பு ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்களிடையே அபிமானம் பெற்ற ஒரு கட்சியாகும்.

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விமர்சிப்பவர்களது ஆளுமை பற்றி தமிழ் மக்களுக்குத் தெரியும். தமிழ் மக்கள், எங்களோடு இருக்கின்றார்கள். சிலர் இடைக்கிடையே வந்து எங்ளைத் தூற்றிச் செல்வதில் அவர்களுக்கு மகிழ்சி என்றால், அவர்கள் விமர்சனங்களை வெளியிடட்டும்.

“தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற அணியை ஒற்றுமையான அணியாக தொடர்ந்து செலுத்திக்கொண்டு செல்லுவதற்கான ஒரு புயலாக இந்த தேர்தல் அமைந்துவழடுமோ என பலரும் அஞ்சினார்கள். அவ்வாறான சில செயல்கள் நடைபெற்றன.

“இருந்த போதும் எமது தலைமைத்துவத்தின் ஆளுமையின் காரணமாக நாங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகவே ஒருங்கிணைந்து தேர்தலில் களமிறங்கியுள்ளோம்.

“காற்று வரும்போது தூக்கிச் செல்லப்படுவது தமிழ் மக்களுக்குத் துன்பகரமான நிகழ்வுகள். தமிழ் தேசிய கூட்டமைப்பைப் பொறுத்தவரை ஒற்றுமை விட்டுக்கொடுப்பு சகிர்ப்த் தன்னமை இலட்சியத்தை நோக்கிய பயணம் என்பன சவால்களாக அமைகின்றபோது, நாங்கள் ஒற்றுமை என்கின்ற விடயத்திலும் தமிழ் மக்களின் இலட்சியம் என்கின்ற விடயத்திலும் ஒன்றுபட்டு செயற்பட்டுக்கொண்டிருக்கின்றோம்.

“அந்த உறுத்தத்தோடு தமிழ் மக்களுக்கு முன்னால் வந்துள்ளன எங்கள் அணியை எல்லா மக்களும் அங்கிகரிப்பார்கள்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .