2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கிரான் வாராந்த சந்தையில் தரமற்ற பொருட்கள் மீட்பு

Editorial   / 2017 டிசெம்பர் 18 , பி.ப. 12:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேரின்பராஜா சபேஷ், துஷாரா

மட்டக்களப்பு, கிரான் வாரந்த சந்தையில் கலப்படம் செய்யப்பட்ட பொருட்கள், உணவுப் பொருட்கள், அழுகிய நிலையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த வாழைப்பழம் ஆகியவற்றை, கிரான் பிரதேச பொதுச் சுகாதார பரிசோதகர்கள், நேற்று (17)  கைப்பற்றியுள்ளனர்.

கிரான் வாரந்த சந்தை, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறுவது வழக்கம். குறிந்த சந்தைக்கு மாவட்டத்தின் பல பாகங்களிலிருந்தும் வியாபாரிகள் வருகை தந்து, வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவதுடன், அதிகளவான பொதுமக்களும் பொருட்களைக் கொள்வனவு செய்து வருகின்றனர்.

குறித்த சந்தையில் தரம் குறைந்த மற்றும் பழுதடைந்த பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக, பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களுக்குக் கிடைத்த தகவலையடுத்து, கிரான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு பொதுச்சுகாதார பரிசோதகர்களான கு.சோமனகாந்தன், த.பகிரதன் ஆகியோர் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே, இவை கைப்பற்றப்பட்டுள்ளன.

அழுகிய நிலையில் விற்பனைக்காக வைக்கப்பட்ட 20 குலை வாழைப்பழம், அயடீன் கலக்கப்படாத உப்பு 56 பக்கெட்டுகள், சுகாதார சீர்கேடு விளைவிக்கும் வகையில் வைக்கப்பட்டிருந்த 80 பணிஸ்கள், கலப்படம் செய்யப்பட்ட 8 கிலோகிரம் மல்லி ஆகியன இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன.

இவற்றில் வாழைப்பழம் மற்றும் பணிஸ் வியாபாரிகளின் அனுமதியுடன் உடனடியதாக அழிக்கப்பட்டதுடன், மல்லி மற்றும் உப்பு பரிசோதனைகளுக்காக கொழும்புக்கு அனுப்பட்டுள்ளதாக, சுகாதா பரிசோதகர் கு.சோமனகாந்தன் தெரிவித்தார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .