2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கிராமங்களுக்குள் புகுந்த யானைகளால் பிரதேச மக்கள் அல்லோலகல்லோலம்

Editorial   / 2018 நவம்பர் 29 , பி.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.விஜயரெத்தினம், ஏ.எச்.ஏ. ஹுஸைன், வடிவேல் சக்திவேல்

மட்டக்களப்பு, படுவான்கரை, திக்கோடையில் இன்று (29) காலை 7 மணியளவில் காட்டு யானைக் கூட்டம் வழிமறித்ததில், கணேச வித்தியாலயத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராகப் பணியாற்றும் வன்னியசிங்கம் வினோதன் என்பவர் உயிராபத்தின்றித் தப்பிக் கொண்டுள்ளாரெனப் பொலிஸார் தெரிவித்தனர்.

எனினும், அவர் பயணித்த மோட்டார் சைக்கிள், காட்டு யானைகளால் துவம்சம் செய்யப்பட்டுள்ளன.

வித்தியாலயத்துக்குகுச்  சென்று கொண்டிருக்கும்போது, காட்டுக்குள் பதுங்கியிருந்த யானை, உத்தியோகத்தரை வழிமறித்துத் தாக்கியுள்ளது.

அவ்வேளையில் தன்னைச் சுதாகரித்துக் கொண்ட உத்தியோகத்தர், காட்டு யானையைப் பராக்குக் காட்டுவதற்காக தனது மோட்டார் சைக்கிளை அவ்விடத்திலேயே கைவிட்டுள்ளார்.

அதனால் காட்டு யானை மோட்டார் சைக்கிளை இலக்காக்கிக் கொண்டு அதனைத் துவம்சம் செய்து தாக்குவதில் ஈடுபட்டிருந்த நேரத்தை தான் தப்புவதற்குப் பயன்படுத்தியதாக உத்தியோகத்தர் தெரிவித்தார்.

இதேவேளை, தும்பங்சேகணி, திக்கோடை, இளைஞர் விவசாயத் திட்டம், களுமுந்தன்வெளி ஆகிய கிராமங்களில் சுமார் 13 காட்டு யானைகள் தினமும் மாலையாகியதும் உலாவி வருவதாக கிராமங்களின் மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் மக்கள் மாலையாகியதும் காட்டு யானைகளின் நடமாட்டத்தால் அல்லோலகல்லோலப்படுவதாகவும் தூக்கமின்றி மரண பயத்தில் விழித்திருபிபதாகவும் தெரிவிக்கின்றனர்.

இவ்விதமாக அட்டகாசம் புரியும் காட்டு யானைகளில் ஒரு சில யானைகள் நேற்றுக்காலை கிராமங்களிலிருந்து வெளியேறிச் செல்லும்போது, வீடுகளைத் தகர்த்து விட்டும், விவசாயப் பயிர்களுக்குச் சேதம் விளைவித்து விட்டும் சென்றதாக கிராமங்களிலுள்ள மக்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .