2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

கிராமசேவையாளரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமைக்கு கண்டனம்

Editorial   / 2020 ஏப்ரல் 05 , பி.ப. 02:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

வ.திவாகரன் 

கிராமசேவையாளர்களின் கடமைக்கு இடையூறு விளைவிப்பது, வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று, மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய கிராமசேவையாளர் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக பிரிவின் கல்லாறு 2 கிராமத்தில் சேவையாற்றும் கிராம சேவையாளரின் சேவைக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நபரொருபர் செயற்பட்டிருக்கின்றார். இச்செயற்பாடு மிகவும் மோசமானதாகும் என்றும் அச்சங்கம் தெரிவித்துள்ளது.
இதுத் தொடர்பில், அச்சங்கம் வெளியிட்டள்ள கண்டன அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

'அவ்வாறு செயற்பட்ட நபருக்கு எதிராக, சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான ஏற்பாடுகளை எமது சங்கம் மேற்கொண்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில், மாவட்ட அரசாங்க அதிபரின் கவனத்துக்கும் கொண்டு சென்றுள்ளோம்' என தெரிவித்துள்ளது. 

'கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற அசாதாரண சூழ்நிலையிலும், கிராமசேவை உத்தியோகத்தர்கள், தம்மை அர்ப்பணித்து 24 மணி நேரமும் வேலை செய்கின்றனர்.  இவ்வாறு கடமைபுரியும, கிராம சேவையாளர்களின் சேவைக்கு ஒத்துழைப்பு வழங்காது, இடையூறு விளைவிப்பதென்பது வன்மையாகக் கண்டிக்கதக்கது' என அச்சங்கம் சாடியுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X