2024 மார்ச் 28, வியாழக்கிழமை

கிழக்கில் சுகாதார சேவைகள் முடங்கின

Editorial   / 2017 நவம்பர் 22 , மு.ப. 11:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.கே.றஹ்மத்துல்லா, தீஷான் அஹமட், ரீ.எல்.ஜவ்பர்கான், ஏ.எம்.ஏ.பரீத், வா.கிருஸ்ணா

நாடளாவிய ரீதியில் தாதி உத்தியோகத்தர்களுடன் இணைந்த சுகாதார சேவையிலுள்ள ஏழு தொழிற்சங்கங்கள், ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் இன்று (22) ஈடுபட்டுள்ளமையால், கிழக்கு மாகாணத்தில் அம்பாறை, திருகோணமலை, மட்டக்களப்பு வைத்தியசாலைகளின் சுகாதார சேவைகள் முடங்கியுள்ளன.

அரச தாதி உத்தியோகத்தர்களின் சம்பள முரண்பாடு, பதவி உயர்விலுள்ள முரண்பாடுகள், மேலதிக நேர வேலைக்கான நிலுவைக் கொடுப்பனவு  உள்ளிட்ட பிரச்சினைகளை நீக்கக் கோரி, இந்த வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அம்பாறை, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் தாதி உத்தியோகத்தர்கள், மருந்தாளர்கள், இணைந்த குறைநிரப்பு வைத்திய சேவையாளர்கள், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர், இன்று காலை 7 மணியிலிருந்து நாளை காலை 7 மணிவரை 24 மணிநேர வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனரென, வைத்தியசாலையின் அரச தாதி உத்தியோகத்தர் சங்கத்தின் தலைவர் ஏ.ஆர். விஸாம் தெரிவித்தார்.

இவ்வேலை நிறுத்தத்தால், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அதிகளவிலான நோயாளர், தமக்கான மருத்துவ சேவைகளை விரைவாக பெறமுடியாது காத்திருந்திருந்தனர்.

இப்போராட்தில் மருந்துக் கலவையாளர்களும் இணைந்துள்ளதால் மருந்துகள் வழங்கும் பகுதியும் வெறிச்சோடிய நிலையில் காணப்பட்டது.

இதேவேளை, நோயாளர்களின் விடுதியிலும் மந்தமான நிலையிலேயே சேவைகள் இடம்பெறுவதாக நோயாளர்கள் தெரிவித்தனர்.

எனினும், நோயாளர்களின் நலன்கருதி, உயிர்காப்பு நடவடிக்கைகளுக்கான அவசர சிகிச்சைப் பிரிவு, சிறுநீரக நோய்ப் பிரிவு, சத்திர சிகிச்சைப் பிரிவுகளுக்கான சேவைகளை மனிதாபிமான முறையில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அம்பாறை மாவட்ட அரச தாதி உத்தியோகத்தர் சங்கத்தின் இணைப்பாளர் ஏ.எம்.பாரீஸ் தெரிவித்தார்.

அத்துடன், திருகோணமலை, மூதூர் தள வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டுள்ள வேலை நிறுத்தப் போராட்டத்தால் தூர இடங்களிலிலிருந்து வைத்திய சேவையைப் பெறுவதற்காக வருகை தந்த நோயாளர்கள், பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

இதேவேளை, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் நடவடிக்கைகளும் முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X