2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கைதிகள் மூலமாக விதைக்கப்பட்ட விவசாய அறுவடை விழா

Princiya Dixci   / 2021 பெப்ரவரி 13 , பி.ப. 08:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

வ.சக்தி, வா.கிருஸ்ணா, ஏ.எச்.ஏ. ஹுஸைன், ஜவ்பர்கான், பழுலுல்லாஹ் பர்ஹான், க.விஜயரெத்தினம்

வரலாற்றில் முதல் தடவையாக கைதிகள் மூலமாக விதைக்கப்பட்ட விவசாய அறுவடை விழா நிகழ்வு, மட்டக்களப்பு திருப்பெருந்துரையில் இன்று (13) நடைபெற்றது.

ஜனாதிபதியின் வழிகாட்டுதலுடன் மட்டக்களப்பு சிறைச்சாலையின் கைதிகளால் சிறைச்சாலைக்குச் சொந்தமான திருப்பெருந்துறை திறந்த பண்னையில் 23 ஏக்கர் நிலப்பரப்பில் பல்வேறுபட்ட விவசாய உற்பத்திகள் செய்கைபண்ணப்பட்டு வரும் நிலையில் அதில் 10 ஏக்கரில் மேற்கொள்ளப்பட்ட மும்மாரி மழைக்காலபோக வேளாண்மை அறுவடை நிகழ்வு இதன்போது நடைபெற்றது.

மட்டக்களப்பு சிறைச்சாலையின் அத்தியட்சகர் எஸ்.எல். விஜயசேகர தலைமையில் இன்று அறுவடை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

நிகழ்வில் மட்டக்களப்பு சிறைச்சாலையின் பிரதான ஜெயிலர் மோகன்ராஜ் உள்ளிட்ட சிறைச்சாலையின் உயர் அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் கைதிகள் என பலரும் பங்கேற்றிருந்தனர்.

ஜனாதிபதியின் அனுமதியுடன் தொடர்ந்தும் சிறைச்சாலைக்குச் சொந்தமான திருப்பெருந்துறை பண்னையில் அதிக பலன் தரும் விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக மட்டக்களப்பு சிறைச்சாலையின் அத்தியட்சகர் சுஜித் விஜய சேகர தெரிவித்ததுடன், அனைத்துவிதத்திலும் இச்செயற்பாட்டுக்கு உதவி புரிந்த அனைத்து உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் மற்றும் சிறைக்கைதிகளுக்கும் தனது நன்றியைத் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .