2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கைம்பெண்கள் குடும்பங்களுக்கு உலருணவுப் பொதி விநியோகம்

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2018 செப்டெம்பர் 13 , பி.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

கைம்பெண்கள் (விதவைகள்) குடும்பங்களுக்கு மாதாந்த வாழ்வாதாரத்துக்கான உலருணவுப் பொதி விநியோகிக்கப்படவுள்ளதாக, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

இந்த விநியோகம், ஹாபிஸ் நஸீர் பௌண்டேஷன் அறக்கட்டளை மூலம் இடம்பெறவுள்ளது.

இது தொடர்பாக இன்று (13) கருத்துத் தெரிவித்த மாகாண முன்னாள் முதலமைச்சர், விதவைகளுக்கான மாதாந்த உலருணவுப் பொதி வழங்கும் செயற்திட்டம், முதற் கட்டமாக, ஏறாவூர் பிரதேச செயலாளர் பிரிவிலிருந்து எதிர்வரும் திங்கட்கிழமை (17) ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாகத் தெரிவித்தார்.

அத்துடுன், இந்த உலருணவு விநியோகம், ஏனைய பகுதிகளுக்கும் காலப்போக்கில் விஸ்தரிக்கப்படுமென்றும், தங்களுக்கு உதவிக்கான வேண்டுகோள் விடுத்து, ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் பிரிவிலிருந்து இதுவரை சுமார் 2,500க்கும் மேற்பட்ட கைம்பெண்கள் தங்களைப் பதிவு செய்து கொண்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

ஆய்வினடிப்படையில், இக்குடும்பங்கள் வறுமைக் கோட்டின் கீழ் வா​ழ்வதும் தங்களது குடும்பத்திலுள்ள பாடசாலைக்குச் செல்லும் சிறார்களை படிப்பிக்க முடியாமல் திண்டாடுவதும் தெரியவந்துள்ளதாகவும் முன்னாள் முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்.

மேலும், பிரதான உழைப்பாளியை இழந்திருப்பதன் காரணமாக, பொருளாதார நிலையில், இக்குடும்பங்கள் நலிவடைந்திருப்பதால் அவர்களது நாளாந்த வாழ்வாதாரம் மிகவும் சிக்கலுக்குள்ளாகியிருக்கிறதாகவும் அவர் கவலை தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .