2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

சட்டவிரோத செயற்பாடுகள்; மட்டக்களப்பில் எண்மர் கைது

ரீ.எல்.ஜவ்பர்கான்   / 2017 செப்டெம்பர் 23 , மு.ப. 11:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாவட்டத்தில் மதுவரி உத்தியோகத்தர்களால் நேற்று (22) மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது, கசிப்பு உற்பத்தி செய்தல்,  சாராயம் விற்பனை செய்தல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களுடன்  தொடர்புபட்ட 8 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனரென, மதுவரி திணைக்கள பிரதிப் பொறுப்பதிகாரி பி.பொன்னம்பலம் செல்வகுமார் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து போதைப்பொருள் பாவனையை முற்றாக ஒழிக்கும் செயற்திட்டததை முன்னெடுத்துள்ளதாக, கிழக்கு மாகாண மதுவரி அத்தியட்சகர் நடராஜா சுசாதரன் தெரிவித்தார்.

இத்திட்டத்தின்கீழ், மதுவரி ஆணையாளர் கே.எம்.ஜி.பண்டாரவின் பணிப்புரைக்கமைய கிரான், கொக்கட்டிச்சோலை, வாகரை, ஆரையம்பதி, ஏறாவூர் ஆகிய இடங்களிலேயே, இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

கைதுசெய்தவர்களில் ஒருவர், மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, கசிப்பு உற்பத்திக்கான உபகரணங்களை வைத்திருந்த குற்றத்துக்காக 50,000 ரூபாய் பிணையில் நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா, விடுதலை செய்தார்.

ஏனைய சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

மதுவரி திணைக்கள அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .