2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

சட்டவிரோதமாக மினிமுத்து சுறாவை பிடித்தவர்கள் கைது

Editorial   / 2017 ஒக்டோபர் 12 , பி.ப. 02:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான் , எம்.எம்.அஹமட் அனாம்

பாரிய மினிமுத்து சுறா (திமிங்கில சுறா)  மீனை, சட்டவிரோதமான முறையில் பிடித்த மீனவர்கள் ​மூவர், வாழைச்சேனையில் வைத்து நேற்று (11) மாலை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனரென, கடற்றொழில் திணைக்களப் பணிப்பாளர் ருக்சான் குறூஸ் தெரிவித்தார்.

சுமார் 170 கிலோகி​ராம் எடையுள்ள இம்மீனை, சட்டவிரோதமான முறையில் பிடித்து, விற்பனை செய்ய முயன்ற நிலையிலே, குறித்த மூவரையும் கைதுசெய்த கடற்படையினர், மாவட்ட கடற்றொழில் திணைக்களத்திடம் அம்மீனவர்களை ஒப்படைத்தனர் எனவும் அவர் தெரிவித்தார்.

கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள், மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது, ஒருவருக்கு தலா 30,000 ரூபாய் ரொக்கப்பிணையிலும் தலா 50,000 ரூபாய் சரீரப்பிணையிலும் விடுதலை செய்ததுடன், எதிர்வரும் 24ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் உத்தரவிட்டார்.

குறித்த மினிமுத்து சுறா மீனினம் கடலில் அழிவடைந்து வருவதால் அதனைப் பிடிப்பதற்கு கடற்றொழில் திணைக்களம்  தடைசெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X