2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சித்த மாநாடும் கண்காட்சியும்

பைஷல் இஸ்மாயில்   / 2018 பெப்ரவரி 19 , பி.ப. 02:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணத்தில் நடைபெறுகின்ற, முதலாவது சர்வேதச சித்த மாநாடு மற்றும் கண்காட்சிக்கு, கிழக்கு மாகாண கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கீழுள்ள ஆயுர்வேத வைத்திய சேவையில் கடமையாற்றுகின்ற 12 பேர் கலந்துகொள்ளவுள்ளனரென, அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் கே.எம்.அஸ்லம் தெரிவித்தார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவப் பிரிவும், வட மாகாண ஆயுர்வேத திணைக்களமும், இந்தியாவின் ஆயுஸ் அமைச்சும் இணைந்து, யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நடத்துகின்ற இந்த மாநாட்டில், தேசிய ரீதியிலுள்ள சித்த, யுனானி, ஆயர்வேத வைத்தியர்களால், மிகக் கூடுதலான ஆராய்ச்சிக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டு, அது தொடர்பிலான உரைகள் இடம்பெறவுள்ளன.

இந்த மாநாடு, எதிர்வரும் 23ஆம் திகதி தொடக்கம் 27ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

கிழக்கு மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி ஆர்.சிஸ்ரீதரின் ஒத்துழைப்புடன், குறித்த வைத்திய அத்தியட்சகர் கே.எம்.அஸ்லம் தலைமையின் கீழ், ஆயுர்வேத வைத்தியர்கள் 7 பேருடன், உத்தியோகத்தர்கள் 5 பேர் கொண்ட குழுவினரே, இந்த முதலாவது சர்வதேச சித்த மாநாட்டிலும், கண்காட்சியிலும் கலந்துகொண்டு, ஆய்வுக் கட்டுரையையும் சமர்ப்பித்து அதுதொடர்பில் உரையாற்றவுள்ளனர் என, அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .