2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

சிரேஷ்ட விரிவுரையாளர் அலியார் பிணையில் விடுதலை

Editorial   / 2019 ஜூலை 11 , பி.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் காத்தான்குடி மௌலவி ஏ.எம்.அலியார் றியாதி  நேற்றுமுன்தினம் புதன்கிழமை பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.கடந்த 10.05.2019 அன்று சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மௌலவி ஏ.எம்.அலியார் றியாதியை சட்டமா அதிபரின் அங்கிகாரத்துடன் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.றிஸ்வான் பிணையில் விடுதலை செய்தார். ஐந்து இலட்சம் ரூபா   சரீரப்பிணையிலும் 25,000 ரூபாய் ரொக்கப்பிணையிலும் இவர் விடுதலை செய்யப்பட்டதுடன் வெளி நாடு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நீதிமன்றத்துக்கு உரிய திகதியில் சமூகமளிக்க வேண்டுமெனவும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.இது தொடர்பான அடுத்த வழக்கு 19.07.2019ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.காத்தான்குடி ஜாமியத்துல் பலாஹ் அறபுக்கல்லூரியின் தலைவரும் காத்தான்குடி இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தின் தலைவரும் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளருமான   ஏ.எம்.அலியார் றியாதி  10.05.2019 அன்று சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு கடந்த இரண்டு மாதங்களாக விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் அவர் தொடர்பான விசாரணைகள் மேற் கொள்ளப்பட்டு வந்தன.இந்த நிலையில் இவருக்கு பிணை மனு கோரி மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் 10.07.2019 நேற்றுமுன்தினம் புதன்கிழமை முன் வைக்கப்பட்ட பிணை மனுவினை விசாரணை செய்த மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.றிஸ்வான் சட்டமா அதிபரின் அங்கிகாரத்துடன் மேற்படி நிபந்தனைகளுடன் இவரை  பிணையில் விடுவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .