2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

‘சிறு விஷமத்தனங்களே பெருந்தீயாகப் பரவுகின்றன’

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2018 நவம்பர் 29 , பி.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

இனங்களுக்கிடையில் வேண்டுமென்றே ஏற்படுத்தப்படும் சிறு விஷமத்தனங்களே, பெருந்தீயாகப் பரவி, அழிவுகளையும் ஆபத்துக்களையும் உருவாக்குவதாக, ஆசியா மன்றத்தின் திட்ட முகாமையாளர் சட்டத்தரணி  ஸாஜஹான்  றொஷான் தெரிவித்தார்.

இவ்வாறான சூழலைத் தவிர்ப்பதே, மாவட்ட பொலிஸ் ஆலோசனைக் குழுக்களினதும் மாவட்ட சர்வ மதப் பேரவையினதும் நோக்கமாகுமென்றும் அவர் தெரிவித்தார்.

தேசிய சமாதானப் பேரவையால் மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் சமாதான செயற்பாடுகள் குறித்துத் தெளிவுபடுத்தும் கொள்கை ஆலோசனைக் குழுக் கூட்டம், மட்டக்களப்பு, கிறீன் கார்டன் விடுதியில் இன்று (29) நடைபெற்றது.

இக்கூட்டம், மட்டக்களப்பு மாவட்ட சர்வ மதப் பேரவையின் இணைப்பாளர் இராசையா மனோகரன் தலைமையில், மாவட்ட பொலிஸ் ஆலோசனைக் குழுக்களின் உறுப்பினர்கள், சர்வ மதப் பேரவை உறுப்பினர்கள், சிவில் சமூகப் பிரதிகள் ஆகியோருக்கிடையில் நடைபெற்றது.

பொலிஸ் ஆலோசனைக் குழுக்களின்  செயற்பாடுகளைப் பற்றியும் அதனோடு மாவட்ட சர்வமதப் பேரவை இணைந்து பணியாற்ற வேண்டிய சந்தர்ப்பங்கள் பற்றியும் விவரங்கல் பல இதன்போது தெரிவிக்கப்பட்டன.

இங்கு கருத்துத் தெரிவித்த ஆசியா மன்றத்தின் திட்ட முகாமையாளர் முஹம்மத் றொஷான், பொலிஸார் எதேச்சையான நடவடிக்கைளில் ஈடுபடுவதாக எழும் அவநம்பிக்கைகளையும் களைந்தெறிய வேண்டுமென்றார்.

ஏனெனில், இத்தகைய அவநம்பிக்கைகளாலும்  பல்வேறு பிரச்சினைகள் புதிதாக உருவாகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், இனங்களுக்கிடையிலான முறுகல்நிலை ஏற்படுத்தப்படுகின்றபோது, எவ்வாறு பொலிஸாருடன் இணைந்து செயற்பட்டு, சுமுக நிலையை உருவாக்கலாம் என்பது பற்றிச் சிந்திப்பதற்கு, இத்தகைய பொலிஸ் ஆலோசனைக் குழு, சர்வமதப் பேரவை உட்பட சமூக நல அமைப்புகளும் தன்னார்வலர்களின் பங்களிப்புகளும் மிக அவசியமாகுமென்றும் அவர் தெரிவித்தார்.

விரும்பத் தகாத சம்பவங்கள் இடம்பெற்று அதன் பிறகு இழப்பீடுகளும் பரிகாரங்களும் தேடுவதை விட குழப்பங்கள் இடம்பெறாமல் வருமுன் தடுப்பதே மேலானனதாகு​ம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .