2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சிறுமியின் மரணம் தொடர்பில் மூவருக்கு விளக்கமறியல்

பேரின்பராஜா சபேஷ்   / 2018 ஒக்டோபர் 04 , பி.ப. 05:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, மயிலம்பாவெளி, காமாட்சி கிராமத்தில் அமைக்கப்பட்ட தாமரைத் தடாகத்தில் விழுந்து ஏழு வயதுச் சிறுமியொருவர் பலியான சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட மூவரையும், 14 நாள்கள் விளக்கமறியலில் வைக்குமாறு, ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில், தாமரை தடாகம் அமைப்பதற்கு உரிமை வழங்கிய சவுக்கடி மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்தைச் சேர்ந்த செல்வராசா செவ்வந்தி, நடராஜன் அமலினி, ஒப்பந்தகாரர் ஞானபிரகாசம் யூலியன் ஜெயப்பிரகாஸ் ஆகியோரை, ஏறாவூர்ப் பொலிஸார் நேற்று (03) கைதுசெய்தனர்.

பிரதேச செயலாளரால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் பிரகாரம், இவர்கள் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

குறித்த சந்தேக நபர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டதைத் தொடர்ந்து, ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்ற நீதவான் கறுப்பையா ஜீவராணி முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே, எதிர்வரும் 17ஆம் திகதிவரை விளக்கமறியில் வைக்குமாறு உத்திரவிட்டார்.
இச்சம்பவம் தொடர்பில், ஏறாவூர்ப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .