2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சிறுவர் சார்ந்த சவால்களைக் கையாள்வதற்கு செயற்பாட்டாளர்களை இணைக்கும் முயற்சி

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2018 ஜூன் 11 , பி.ப. 02:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறுவர் சார்ந்த சவால்களைக் கையாள்வதற்கு ஏற்ற வகையில், அரங்கமொன்றை அமைத்து, செயற்பாட்டாளர்களை இணைக்கும் முயற்சி  இடம்பெற்று வருவதாக, மாவட்ட சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் மஹ்புன் நிஸா றியாஸ் தெரிவித்தார்.

இதன் முதற்கட்டமாக, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு முன்னாலுள்ள மாவட்ட சிறுவர் அபிவிருத்தி உப குழு அலுவலகத்தில் நாளை (12) காலை 10 மணிக்கு நிகழ்வொன்று இடம்பெறுமென அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் மேலும் தெரிவித்ததவாது,

“சிறுவர்களின் விவகாரங்களைக் கிரமமான முறையில் கையாள்வதற்கு ஏற்ற வகையில், சிறுவர் நலன் சார்ந்த  செயற்பாடுகளோடு சம்பந்தப்பட்ட சகல தரப்பினரையும் ஒருங்கிணைத்து, அரங்கம் ஒன்றை உருவாக்கும் முயற்சியே இதுவாகும்.

“இந்த அரங்கத்தின் ஒருங்கிணைந்த கலந்துரையாடலில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் உட்பட துறைசார்ந்த வைத்தியர்கள், மாவட்ட சிறுவர் பாதுகாப்பு அலுவலர்கள், சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்கள், உளநல உதவியாளர்கள், கல்வித்துறை சார்ந்த அதிகாரிகள், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் சிறுவர் நலன்சார்ந்த செயற்பாட்டு அலுவலர்கள் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

“மாவட்ட சிறுவர் அபிவிருத்தி உப குழுவை மீளமைத்தல்,  மாவட்ட சிறுவர் அபிவிருத்தி உப குழுக் காரியாலயத்தில் இடம்பெறுகின்ற சம்பவ மாநாடுகளை  வினைத்திறனாக மீள இயக்குதல், கல்வி அரங்கம் ஒன்றை உருவாக்குதல், கல்விச் செயற்பாட்டாளார்களின் ஆதரவை அதிகரித்து உள்வாங்குதல், சிறுவர் சார்ந்த சவால்களை முறியடிக்க எதிர்காலத்தில் எவ்வாறுசெயற்படலாம் என்ற ஆலோசனைகளைப் பெறல் உள்ளிட்ட கலந்துரையாடல்கள் அரங்கத்தில் இடம்பெறும்.

“மேலும், பாடசாலை மட்டத்தில் சிறுவர் சார்ந்து இடம்பெறுகின்ற சவால்களுக்கு எவ்வாறு முகங்கொடுத்து ஆக்கபூர்வமாகக் கையாளுதல், கல்விப் பிரிவில் எடுத்து வரும் எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் பற்றி ஆராய்தல் உள்ளிட்ட பல விடயங்களும் அரங்கத்தில் இடம்பெறும்” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .