2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

‘சிறுவர்களை மய்யப்படுத்தி அனர்த்த குறைப்பு வேலைத்திட்டம்’

வா.கிருஸ்ணா   / 2019 ஜனவரி 22 , பி.ப. 12:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சிறுவர்களை மய்யப்படுத்தியதான அனர்த்த குறைப்பு வேலைத்திட்டம் ஒன்றை உருவாக்கும் பணிகள், மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

ஐக்கிய நாடுகள் சிறுவர் அபிவிருத்தித் திட்டத்தின் நிதியுதவியுடன், சிறுவர் அபிவிருத்தி நிதியமானது, மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்துடன் இணைந்து, இத்திட்டத்தை முன்னெடுத்துள்ளது.

இதன் முதற்கட்டமாக, அதிகளவில் அனர்த்தங்களை எதிர்கொள்ளும் கிரான், வாழைச்சேனை, வாகரை ஆகிய பகுதிகளை உள்ளடக்கியதான செயற்றிட்டத்தைத் தயாரிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதற்காக சிறுவர் தொடர்பில் பணியாற்றுவோருக்கான பயிற்சித் திட்ட நிகழ்வு, இன்று (22) ஆரம்பிக்கப்பட்டது.

இப்பயிற்சி முகாம், சிறுவர் அபிவிருத்தி நிதியத்தின் மட்டக்களப்பு மாவட்டத் திட்ட இணைப்பாளர் மன்சூர் அகமட் தலைமையில், சத்துருக்கொண்டான், எஸ்கோ பயிற்சி நிலையத்தில் ஆரம்பமானது.

அனர்த்தங்களின்போது சிறுவர்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக்கொள்ளும் வகையிலும் ஏனைய சிறுவர்களைப் பாதுகாக்கும் வகையிலும் செயற்படும் வகையிலான விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவதற்கான பயிற்சிகள் இங்கு வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில், கோறளைப்பற்று மத்தி உதவி பிரதேச செயலாளர் எஸ்.எம்.அல்அமீன், மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் எஸ்.கோகுலராஜா உட்பட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X